1959 ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டம் (1983-இல் திருத்தப்பட்டது) சந்தேக நபர்களை 72 நாள்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க வகை செய்வதாகக் கூறுகிறார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார்.
ஆனால், அவ்வாறு தடுத்துவைக்க நீதிமன்ற உத்தரவைப் பெறுவது அவசியமாகும்.
அச்சட்டத்தின்கீழ் இப்போது நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் இதுவரை 200 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காலிட் பினாங்கில் கூறினார்.
அம்மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஐயுறப்படும் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அறிவிப்பதற்காக காலிட் பினாங்கு சென்றுள்ளார்
அப்புறம் என்ன? EO & ISA இல்லை என்று ஒரே கூப்பாடு போடுகின்றார் உள் துறை அமைச்சர்? அதற்க்கு ஜால்ரா அடிக்க அல்லக்கை மகாதிர் மற்றும் அம்னோபுத்ராக்கள் தேவையா?
என்ன 72 நாட்களா ? லாகாப்பில் நடக்கும் மரணங்கள் அதிகரிக்குமே !
சிந்தனை தோன்றி அறிவு வளர்த்தது இன்றல்ல
நேற்றல தன்னை திருத்தி கொள்ளாமல் ஏனோ வாழ்தவர்கள் …
வரும் நாளை மனிதன் வேறு உலகை ஆளப்போகிறான் இங்கே பேருக்கு பஞ்சம் வந்துவிட்டது?
அந்த 72 நாளில் திருக்குறள் புத்தகத்தை படித்து நம்பவர்கள் திருந்தி வருவார்கள் என நம்புவோம்