தேசிய சேவையில் பங்கு கொள்ளும் இளம் பெண்கள் கட்டாயமாக கருத்தரிப்பு சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது ‘அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை மீறுவதுடன்’ பெண்களுக்கு நன்மையைக் காட்டிலும் தீமையையே கொண்டு வரும் என மகளிர் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் கருதுகின்றன.
“காரணம் தாய்மை அடைந்துள்ளதை கண்டு பிடிக்காமல் தடுக்க திருமணமாகாத பயிற்சியாளர்கள் ‘தீவிரமான நடவடிக்கைகளில்’ இறங்கக் கூடும்.”
“கருச்சிதைவு தான் தங்களுக்கு உள்ள ஒரே வழி என அந்த இளம் பெண்கள் எண்ணும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது மகளிர் உதவி நிறுவனத்தின் (WAO) நிர்வாக இயக்குநர் ஐவி ஷோஷியா சொன்னார்.
திருமணத்துக்கு முன்பு தாய்மை அடையும் பெண்கள் குறித்து குடும்பங்களும் சமூகமும் கூட புரிந்துணர்வைக் கொண்டுள்ளன. ஆனால் அதிகாரிகள் தான் சுட்டிக் காட்டுகின்றனர்,” எனக் குறிப்பிட்ட அவர் கட்டாய சோதனை நடவடிக்கையில் அவமானம் என்ற அம்சமும் கலந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
தேசிய சேவைப் பயிற்சியில் கலந்து கொள்ளும் எல்லா பெண்களும் கருத்தரிப்பு சோதனை செய்து கொள்ள வேண்டும் என நேற்று அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அந்தப் பயிற்சி தொடங்கப்பட்டது முதல் ஆறு பயிற்சியாளர்கள் முகாம்களில் பிரசவித்துள்ளனர்.
அத்தகை சோதனைகள் “‘அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை மீறுகிறது” என அனைத்து பெண்கள் நடவடிக்கைக் கழகத்தின் (Awam) தலைவர் ஹோ யோக் லின் சொன்னார்.
அந்தச் சோதனை சுய விருப்ப அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.
சேர்ந்த ஒரு வாரத்தில் சோதித்து விரட்டலாமே ? பெண்களுக்கு ஒரு கேவலமான சோதனை முகாம் / கன்னிப பெண்கள்
சோதனை காலம். தமிழ்ப பெண்கள் கற்பை சோதிக்க இந்து மதத்தில் இடமில்லை. காப்பாற்ற இந்து மத குருக்கள் யாருக்கும்
…….இலையோ? நாக்கே இலாத குடிக்க தெரியாத பாம்புக்கு குடம் குடமாய் பால் தூக்கி / முட்டை வைக்க மார்க்கெட் ல விலை போகும் சாமி ஆடிகல் ஆவது முன் வரக்கூடாதா?