பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறுகிறார்.
அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நேற்று பேசினார்.
தாய் மொழிப் பள்ளிகள் வளர்ச்சி அடைவதைக் காணத் தாம் விரும்புவதாகவும் வான் சைபுல் சொன்னார். பயிற்று மொழி உட்பட கல்வி விஷயத்தை பெற்றோரிடமே விட்டு விடுவது நல்லது; ‘புத்ரா ஜெயாவில் தொலை தூரத்தில் உள்ள கொள்கை வகுப்பாளர்களிடம் அல்ல” என்றார் அவர்.
பள்ளிக்கூட நிர்வாகங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து அகற்றப்பட்டு
பரவலாக்கப்படும் வரையில் பள்ளிக்கூடங்கள் வழியாக ஒற்றுமையை ஏற்படுத்தும் எந்தப் பேச்சும் பிளவுபடுத்துவதாகவே இருக்கும் என்றும் வான் சைபுல் சொன்னார்.
“கல்வி நம்மைப் பிரிக்கவில்லை. கல்வி முறைக்கு பின்னணியில் உள்ள அரசியல் ஆட்டமே நம்மைப் பிளவுபடுத்துகின்றது.”
“மக்கள் தங்களை ஆதரிக்கும்படி செய்ய வேண்டிய கட்டாயம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. நமது பிள்ளைகளுடைய எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான விரிவான அதிகாரம் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதே பெரிய பிரச்னை ஆகும்.”
அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!!!
பள்ளியில் பயிலும் மாணவர்களை பிரித்தாளும் அரசாங்கத்தின் கொள்கையினால் பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. முழு தங்கும் விடுதி வசதி உடைய பள்ளிகள் (full boarding school including MRSM etc, etc) அனைத்திலும் மலாய் மாணவர்களை மட்டும் சேர்த்து படிக்க வைப்பது. அடுத்து, தேசிய வகை மேல்நிலை கட்டுப் படுத்தப்பட்ட பள்ளிகளில் (controlled secondary schools) 60% மலாய் மாணவர்களும் மீதம் மற்றவர்கள் என பாகுபாடு செய்வது! இதற்குப் பிறகு கல்வியில் தரம் குறைந்த பள்ளிகளில் இந்திய சீன மாணவர்கள் மிதமிஞ்சி இருப்பது. ஒரு சில பள்ளிகளில் 100% இந்தியரோ அல்லது சீன மாணவர்களோ இருப்பது. இப்படி அடிப்படையிலேயே பிரித்தாண்டு விட்டு ஒற்றுமை இல்லை , ஒற்றுமை இல்லை என்று வெறும் கூப்பாடு போடுகின்ற அரசியல்வாதிகளையும், தங்களை படித்த மேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் ஒரு சில பேராசியர்களையும் செருப்பால்தான் அடிக்கணும். அப்பாவாவது, இந்த அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு அறிவு வேலை செய்யுதாவென்று பார்ப்போம்.
தெளிவான, உண்மையான நிலவரத்தை வெளிப்படையாக பேசிய உங்களுக்கு எனது பாராட்டு…
பிற மொழியை அழிப்பதே இந்த மக்களின் சேவகனான கல்வி அமைச்சரின் நோக்கம் என்பது வெள்ளிடைமழை.
உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை. இதுவே அம்னோவின் நோக்கமாகும்.
தற்போதைய கல்வி அமைச்சரின் ஆலோசகர்கல் தவறான திட்டங்கலை வழங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் கல்வியமைச்சரை குறை கூறுவதில் நாம் எதையும் சாதிக்க முடியாது .ஆலோசகர்கலை முதலில் திருத்தவேண்டும்.
சரியான அடி
“BTN கொள்கைகளை உள்வாங்கிய கல்வித் திட்டத்தை நாங்கள் அமல் படுத்தியே தீருவோம். உங்கள் ஆலோசனைகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.”
தேனி சொல்வதை வரவேற்கின்றேன். வான் சைஃபுல் சொல்வது போல் தாய்மொழி ஆரம்பப் பள்ளிகளால் பிரச்சனை இல்லை. நமது கல்வி அமைச்சின் மோசமான கல்விக் கொள்கையே காரணம். இல்லாவிட்டால் ETeMs வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல்,10 பில்லியனைச் செலவுசெய்தபின் அதனை இரத்து செய்வார்களா? இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இவர்களுக்குப் புரிகிறதா இல்லையா …கடவுளே!