பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சக அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ள வேளையில் வேதமூர்த்தி தமது பணிகளை தொடர வேண்டும் என கெராக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பினாங்கு சுங்கை நிபோங்கில் கடந்த வாரம் சந்தேகத்துக்குரிய ஐந்து இந்திய குண்டர் கும்பல் உறுப்பினர்களை போலீசார் சுட்ட சம்பவம் குறித்து தமது ‘கவலையைத் தெரிவித்த போது’ வேதமூர்த்தி துணை அமைச்சர் என்ற முறையில் தமது பணியைத் தான் செய்துள்ளார் என கோகிலன் சொன்னார்.
இந்திய சமூகத்தை மேம்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பிரதமர் துறை துணை அமைச்சர் என்ற தமது வேலையைத் தானே வேதமூர்த்தி செய்தார்.”
மனித உரிமைகள் அடிப்படையில் வன்முறைகள் அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய சமூகத்தை பொதுவாக முழு சமுதாயத்தையும் அவர் தற்காக்க முயன்றுள்ளார்,” என கோகிலன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
நல்லது!!!!
ஐயா கோகிலன் அவர்களே,
பதவியில் இருக்கும்போது நீரும் இப்படிப் பேசியிருந்தால் பிரதமர் உன்னையும் இப்படித்தான் “சும்மா பொத்திகிட்டு இருடானு” அன்போடு சொல்லியிருப்பார்..
வேதமூர்த்தி அவர்களே,
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி போராடுங்கள். அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாட்டை மக்கள் நன்றாக தெரிந்துகொள்ளட்டும்…இவ்விவகாரத்தில், பிரதமரும் உங்கள் பக்கம் இல்லை என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்..
தயவு செய்து கமனாதனைபோல் கைமுத்தம் கொடுத்து பொதிமாடுபோல் (அங்கோக்.. அங்கோக்…… கீலிங்… கீலிங் ) செய்யாதீர்கள்…
ராமசாமி மண்டோர் அவர்களே, உங்கசர்பலே எதோ நாட்டுக்கு நல்லது செய்யலாமே.
உள்ளே இருந்துகிட்டு ஒன்னும் பண்ண முடியாது சகோதரர்களே …உண்மை சுடும், உண்மை வலிக்கும்….சூடு…வலி இந்த இரண்டும் இப்போ …..அன்றைக்கு எப் ஆர் யூ 50,000 ஆயிரம் பேரை அடித்ததை காட்டிலும் அதிகமாக இருக்கும் வேதா …..வாங்கித்தான் ஆகவேண்டும் ,,…அது உங்கள் தேர்வு …..உள்ளே இருந்து கொண்டு எதுவும் செய்யமுடியாது,…கொடுப்பதை வாங்கிகிட்டு மூடிகிட்டு இரு என்பதை தான் நஜிப் நாசூக்காக சொல்லியிருக்கார் வேதா….முடிஞ்ச வரைக்கும் போராடு…..முடியிலையா…பரவாயில்லே வேதா…இந்த சமுதாயம் உன்னை நன்றியோட பார்க்கும் …நிச்சயமா பார்க்கும். ஆனா…கொள்கையை அடமானம் வச்சுட்டு, பென்சன் வீனாபோயிடும், கானாபோயிடும்ன்னு நினைச்சு ஜால்ரா போடுற தலைவனுங்கள போல நீயும் மாறினா ….வேதா… இப்போ சொல்றேன் கேட்டுக்கோ…இந்த தலைமுறை என்ன…அடுத்த தலைமுறையும் கூட உன்னை எட்டப்பன் வேதாவாகத்தான் பார்க்கும் சொல்லிட்டேன் !! ஏன்னா உன்னோட கதையே வேற வேதா …அது உனக்கே தெரியும்…இந்த மக்களுக்கும் தெரியும்!!!
என்ன கோகிலன் பிள்ளையை பத்தி ஒன்னும் சொல்லலியேன்னு பார்த்தீங்களா…பாவன் அவன் பிள்ளை…சின்ன பிள்ளை !! அடிவாங்கி , நொந்த களைப்பிலே ஏதோ சொல்றான் பிள்ளை !!
வேதமூர்த்தி அவர்களே உங்கள்ளுக்கு என் வாழ்த்துக்கள்.
அடே பாவிங்களா…. ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்கிறான்.. அதே கேலி பண்றீங்களே… உங்களே என்னன்னு சொல்றது… ஈஸ்வரா…….
ஹிண்ட்ரப் என்ன மற்றவரைப்போல தலையாட்டி பொம்மையா?வேதா செய்தது சரியே! Umno பொதுத்தேர்தல் வருது இல்லையா அதனால் நம்மே பிரதமர் மலைய்கர்களின் அதரவு வேண்டும்.அதனால் இவரை வாய் பேசகூடாது என கூறுகிறார் போலும்.ஹிண்ட்ரப் எதற்கும் அசையாது
வேதமூர்த்தி அவர்களே……தைரியமாக உங்கள் சமுதாய கடமையை செய்யுங்கள்.தயவு செய்து அம்னோவுக்கு படிந்து போகாதீர்கள்.
வேதா துணை அமைச்சர் வேலையைத் தானே செய்கிறார்,,,ஆமாம் நீ என்ன அவனுக்கு வக்காளத்தா ??நல்லாவே கும்மி அடிக்கிறேங்க்கடா
ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரை ராஜினாமா செய் என்று சொல்ற கேவலமான கலாச்சரம் இந்த நாட்டில் மட்டுமே நடக்குது இதுவும் சுதந்திரமா? இது பத்தி ஒரு PKR /PR நாடாளுமன்ற உறுப்பினரும் இன்னும் எந்த பித்தலாட்ட செய்தியும் விடலை ? புரியலையோ?