ஆலய சச்சரவில் அதிகாரிகளின் நடத்தை மிகைப்படியான ஒன்று- மஇகா

fracasஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் ஆலயத்தில் அமலாக்க அதிகாரிகள் நடந்துகொண்ட முறை அத்துமீறிய ஒன்று என்கிறார் மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.

ஞாயிற்றுக்கிழமை அந்த ஆலயத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றிக் கருத்துரைத்த அவர், அமலாக்க அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்றார்.

 

mic“சில நேரங்களில் அமலாக்க அதிகாரிகள் மிகைப்படியான வேகம் காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். நோயாளியின் பாதுகாப்பும் சுகாதாரப் பராமரிப்பும் என்னும் இந்த மாநாடு போல் அமலாக்க அதிகாரிகளுக்கும் நடத்த வேண்டும். அது, அவர்களின் தொடர்புமுறையை மேம்படுத்திக் கொள்ளவும் கடமையைச் சரியாகச் செய்யவும் உதவும்”.

அமலாக்கப் பணியைச் செய்யும் வேளையில் இப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வது இது முதல்முறை அல்ல என்று அமைச்சர் கூறினார்.