தாயகங்களை விட்டு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 230 மில்லியனைத் தாண்டுகிறது.

globe only logoஉலகில் தங்களது பிறந்த நாட்டை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் குடியமர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 230 மில்லியனை தாண்டியிருப்பதாக ஐ நா தகவல் வெளியிட்டுள்ளது. அதிகமான மக்கள் குடிபெயர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் மெக்சிக்கோவை சேர்ந்த 13-மில்லியன் பேர் குடியேறியுள்ளனர். அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனாகும்.