ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கட்டுப்படுத்தும் தமது 13 வருடகால இராணுவ நடவடிக்கையை நேட்டோ படைகள் பூர்த்தி செய்துள்ளன.

afghanistan_nato
ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும்

 

இந்த நடவடிக்கைகளை முறைப்படி முடித்து வைப்பதற்கான நிகழ்வு ஒன்று காபூலில் நடத்தப்பட்டது.

இனிமேல் அங்கு பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக, ஆப்கான் படைகளுக்கு உதவுவதற்கான பங்களிப்பை மாத்திரம் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் அங்கு செய்யும்.

13,000 துருப்பினரைக் கொண்ட தற்போதைய புதிய படையணியில் பெரும்பாலும் அமெரிக்க படையினரே இடம்பெறுவார்கள். -BBC

TAGS: