புல்வாமா தாக்குதல் கொடூரமானது- அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு…

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்!

நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினருக்கும் ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2…

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை; எந்த நாட்டில் தெரியுமா?

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி,…

நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் – மத…

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 'குற்றப்பின்னணி உடையவர்களால்' கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை.…

சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்…

கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியை நடத்தினர். சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றதாக கருதப்படும் இந்த பேரணியின்போது, கேட்டலன் கொடியை ஏந்திக்கொண்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். ஸ்பெனிலிருந்து…

வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை?

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இராக் எல்லையில் உள்ள சிரியாவின் பக்கத்தில், ஐஎஸ் அமைப்பின்…

வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி- குவைடோவை ஆதரித்து புளோரிடாவில் உரையாற்றுகிறார் டிரம்ப்!

வெனிசுலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார். எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற…

ஐ.எஸ் அமைப்பில் சேர 15 வயதில் தப்பிய சிறுமி; பிரிட்டன்…

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இராக்கில்…

ஜனாதிபதி தேர்தல் – டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்…

அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலில் 70 பேர் பலி!

சிரியா நாட்டின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின்…

நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற…

சுற்றுச்சூழல் பாதிப்பு: மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவு

இந்தப் புவியை நோக்கி வரும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பார்க்கத் தவறிவிட்டதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பொது கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனமான ஐபிபிஆர்-இன் அறிக்கை, மனிதர்களின் தாக்கம், சமூதாயத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அளவுக்கு ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்கிறார்கள்…

மனிதர்கள் சொல்லாமல் தானே தாக்குதல் நடத்தவல்ல சீன விமானம்- 3ம்…

மனிதர்கள் கட்டளை பிறப்பிக்காமல் ஆபத்தை தானே உணர்ந்து தாக்குதலை நடத்த வல்ல ஆளில்லா விமானத்தை சேவையில் இணைத்துள்ளது சீன ராணுவம். இது 3ம் உலகப் போரை ஆரம்பிக்க வல்லது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த 4ம் தலை முறை ஆளில்லா விமானம், பல மணி நேரம் வானில்…

முதலில் பூச்சி இனம், அடுத்து மனித குலமா? – எச்சரிக்கும்…

மனித செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. பயாலஜிகல் கன்சர்வேஷன் எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு, இந்த அழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இது மோசமான விளைவுக்கு வித்திடும். மனிதர்கள் வாழ்வதே கேள்விகுறியாகும் என்கிறது. தீவிர…

மீண்டும் முடங்குகிறதா அமெரிக்க அரசு?: நெருங்கி வரும் காலக்கெடு

எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், அமெரிக்காவில் மீண்டும் அரசுத்துறைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் வழங்கும் வகையில், திங்கள்கிழமைக்குள் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆவணமில்லாத குடியேறிகள்…

இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய…

இரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பல மாற்றங்கள் அந்நாட்டில் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் வாழ்வில். ஒரு காலத்தில் இரான் பெண்கள் எந்த ஆடை கட்டுபாடும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1930ஆம் ஆண்டு அந்நாட்டின் அப்போதைய ஷா, பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வலுக்கட்டாயமாக தலைமறைப்பை…

சிரியாவில் கடைசி கோட்டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் –…

சிரியாவில் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதிகளில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், இராக் எல்லை அருகே கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணி நேரமாக நடந்து வரும் சண்டையில், இஸ்லாமிய அரசின் நிலைகள்…

பூமியைக் காக்க உண்ண வேண்டிய உணவுகள்!

பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், கோடிக்கணக்கான…

உலகில் குறைவான அளவு இறைச்சி எடுத்துக்கொள்ளும் நாடு இந்தியா

மக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும், பால் பொருட்களைக் கூடத் தவிர்க்கும் வீகனாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம்…

பருவநிலை மாற்றத்தின் தாக்கம்: நகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் –…

ரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைந்த…

அமெரிக்காவின் பரம எதிரியாக இருந்த வியட்நாமில் டிரம்ப் – கிம்…

தெற்கு வியட்நாமில், தனாங் நகரத்தில் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க துருப்புகள் வற்து இறங்கியது, தென்கிழக்கு ஆசியாவில் முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான வன்முறை போருக்கு வித்திட்டது. கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அதே நகரத்தில் வியட்நாமின் முன்னாள் எதிரி நாடான அமெரிக்காவும், வியட்நாமின் பனிப்போர்…

திருச்சபைகளில் பாலியல் அடிமைகளாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் – போப் ஒப்புதல்…

திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் - போப் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு…

டிரம்ப் : ”அடுத்த வாரத்தில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகள் 100%…

சிரியா மற்றும் இராக்கில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியம் அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் "100%" விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அநேகமாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு சமயத்தில்,…