ரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி முறையில் இயக்கி சோதனை!

ரஷ்யாவின் புதிய ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி முறையில் இயக்கி சோதனை நடத்தியுள்ளனர்.

ஓகோட்னிக் நிறுவனத்தின் ஹண்டர் என்ற புதிய ஆளில்லா உளவு விமானத்தை ரஷ்ய விமானப்படை வாங்கியுள்ளது. இந்நிலையில் எஸ்யூ 57 ரக விமானத்துடன் இணைந்து ஹன்டர் ஆளில்லா விமானம் பறந்து சென்ற வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இதையடுத்து எஸ்யூ விமானத்தின் விமானியே, ஆளில்லா விமானத்தையும் இயக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஆளில்லா உளவு விமானங்கள் தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் இயக்கப்படும்.

ஆனால் ஹண்டர் விமானம் முழுவதும் தானியங்கி முறையில் இயக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி தாக்குதலுக்கான இடம், நேரம் என அனைத்தும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பின்னர், ஹன்டர் விமானம் தாக்குதலை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in