ஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீன கருவியை கண்டறிந்துள்ள அமெரிக்கா!

ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.

ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தக் கருவிகளை 16 புள்ளி 28 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. ரேடார் வடிவில் இருக்கும் இந்த வகை கருவியில், ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அந்த ட்ரோன்களை வீழ்த்த முடியும் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக சவுதியில் கடந்த வாரம் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் எண்ணெய் கிணறுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் வேலை செய்யாமல் போனது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in