2 லட்சம் லிட்டர் டீசலுடன் பற்றி எரியும் மீன்பிடி கப்பல்!

நார்வேயில் 2 லட்சம் டீசல் எண்ணெயுடன் கொளுந்துவிட்டு எரியும் மீன்பிடி கப்பல், எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருப்பதால் துறைமுகத்துக்கு ஆபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மர்மான்ஸ்க் ட்ராவ்ல் ஃப்லீட் எனும் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தாமான மீன்பிடிக் கப்பலில் நேற்று வெல்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அருகில் உள்ள மீன்பிடிப் படகு 24 மணி நேரம் தீயில் எரிந்து பின் கடலில் மூழ்கியது. மீண் பிடிக் கப்பலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

புகையை சுவாசித்த 29 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அம்மொனியா கொல்கலனும் 2 லட்சத்துக்கும் அதிகமான லிட்டர் டீசலும் கொண்டுள்ள அந்த கப்பல் எந்நேரமும் வெடித்துச் சிதறக் கூடும் என்பதால், அதைச் சுற்றியுள்ள படகுகள், கப்பல்கள் அகற்றப்படுகிறது. துறைமுகத்துக்கு ஆபத்து நேரும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

-athirvu.in