பேச்சுக்களைப் புறக்கணித்த ஈரான்

பதற்றங்களைக் குறைப்பதற்கான இறுதி நிமிட ஐரோப்பிய நகர்வுகளுக்கு மத்தியில், வரலாற்று ரீதியாக அமைந்திருக்கக் கூடிய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பை ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றொஹானி நிராகரித்ததுடன், ஈரானுக்கெதிரான தடைகள் குறித்த ஐக்கிய அமெரிக்காவின் உறுதியான நிலை குறித்தும் ஐக்கிய அமெரிக்காவைச் சாடியுள்ளார்.

தனது பொருளாதார அழுத்தத்தை ஐக்கிய அமெரிக்கா பேணும் வரையில் எந்தவொரு பேச்சுக்களும் இருக்காது என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நேற்று உரையாற்றும்போது ஜனாதிபதி ஹஸன் றொஹானி தெரிவித்துள்ளார்.

தடைகளின் கீழான எந்தவொரு பேரம்பேசலுக்கான தங்களது பதிலளிப்பு எதிர்மறையாக இருக்கும் என அறிவிக்க விரும்பும் என ஈரானுக்கெதிரான தடைகளை ஐக்கிய அமெரிக்கா பரவலாக்கிய சில மணித்தியாலங்களில் ஜனாதிபதி ஹஸன் றொஹானி கூறியுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடனான மூன்று சந்திப்புக்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிகழ்த்தியிருந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் புகைப்படமெடுக்கும் யோசனையை நிராகரித்திருந்த  ஜனாதிபதி ஹஸன் றொஹானி, பேரம்பேசல்களின் இறுதிக் கட்டங்களிலேயே புகைப்படம் எடுக்க வேண்டுமெனவும், ஆரம்பத்தில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் முழுமையான யுத்தத்தின் பாதிப்பைக் குறைக்கும் என தான் நம்பிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி ஹஸன் றொஹானியிடையேயான சந்திப்பை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி ஹஸன் றொஹானி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் ஐக்கிய நாடுகளில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk