நைஜீரியாவில் கொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்தவர்கள் உள்பட 300 பேரை போலீசார் மீட்டுள்ளனர். வடக்கு நைஜீரியாவில் உள்ள கடுனா (Kaduna) என்ற என்ற நகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 5 வயது முதல் 20 வயது வரையான சிறார்கள், இளைஞர்கள் என பெரும்பாலும் ஆண்கள் அடங்கிய 500 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலரது கால்களும், கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. சிலரது முதுகில் கசையடிகளின் தழும்புகள் காணப்பட்டன.
அவர்களில் பலர் தங்களது பெற்றோரால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பட்டினி போட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அத்தகைய பள்ளிகளை மூடத் திட்டமிட்டிருப்பதாக நைஜீரிய அதிபர் முகமது புகாரி ஏற்கெனவே கூறியுள்ளார்.
-athirvu.in