பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவிலான அதிநவீன சர்வதேச விமானநிலையம்…

சீன தலைநகர் பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். ஹெபை((Hebei)) மாகாணத்தில் லாங்ஃபாங்((Langfang)) என்ற நகரத்தில் 173 ஏக்கரில் கிட்டத்தட்ட 100 கால்பந்து மைதானத்தின் அளவுக்கு அதிநவீன பெய்ஜிங் டாக்ஸிங் விமானநிலையம்…

பிரிட்டன் பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறி!

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்திருப்பதால், பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் ((Boris Johnson)) நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்ததால், நாடாளுமன்றத்தை போரீஸ் ஜான்சன் முடக்கி வைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில்…

சீன ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாப்புக்குள் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கடத்தல்!

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் சீனாவின் ஆளில்லா விமானம் மூலம் பஞ்சாப்புக்குள் வெடிபொருட்கள், ஆயுதங்களை கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எல்லைப் பகுதியில் ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் காலிஸ்தான் தீவிரவாதக் கும்பல்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 8 ட்ரோன்கள் 80…

பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது -இங்கிலாந்து உச்ச…

பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்தது சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு செய்தது. இதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே தோல்வியடைந்ததால் அவர்…

அல்கொய்தாவினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்ததாக இம்ரான் கான் ஒப்புதல்!

அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்ததாக முதல்முறையாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் (Council on Foreign Relations (CFR) )எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசினார். அப்போது…

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை: பிரேசில் அதிபர் சயீர்…

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை எனப் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில் தெரிவித்தார். ஐ.நா சபையில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர், "அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்" என்றார். குதர்க்க வாதம் அமேசான்…

பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க்: “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?”…

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா.…

பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடு தீர்வு தருமா? 5 ஆண்டுகளில்…

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு மாநாடு சற்று முன்னர் கூடியுள்ள நிலையில், புவி வெப்பமடைதலின் அறிகுறிகளும் தாக்கங்களும் கடந்த சில ஆண்டுகளில் துரிதமாகி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது. வானிலை குறித்த தரவுகள் சேகரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில், 2014…

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 'ஷா தின்' எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா…

சவுதி தாக்குதலைச் சுட்டிக் காட்டி அமெரிக்காவைச் சீண்டும் ரஷ்யா!

சவுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை, புத்திசாலித்தனமான அமெரிக்க ஏவுகணைத் தடுப்பு அமைப்பால் தடுக்க முடியவில்லையா? என்று ரஷ்யா சீண்டியுள்ளது. ஆயுதச் சந்தையில் முன்னணி இடம்பிடிப்பது தொடர்பாக ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது. தங்கள் நாட்டுத் தயாரிப்புகள் தான் சிறந்தவை என்று இரு நாடுகளும் மாறி மாறி…

செளதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: “பதிலடி கொடுக்கப்படும் ”…

கடந்த வாரம் செளதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகத் தேவையான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கப்படும் என செளதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னால் இரான் இருப்பதாக அந்நாடு மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது. படத்தின் காப்புரிமைFAYEZ NURELDINE/AFP/GETTY IMAGES செளதி…

பொருளாதார சரிவு: வறுமையால் கிட்னி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞர்கள்?

பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் ஈரானில் வறுமையால் பல இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முன்வந்துள்ளதாகவும், அதை தெருக்களில் விளம்பரப்படுத்தியதாகவும் ஈரான் எதிர்ப்பு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான…

சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. சௌதியில் நடந்த ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு தங்களின்…

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி – எச்சரிக்கும்…

ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.…

சௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ‘இரானில் இருந்து தாக்குதல்…

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த…

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் தஞ்சம் கோரிய ஸ்னோடன்!

அமெரிக்கா, பிறநாடுகளை கண்காணித்தது தொடர்பான ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா ராணுவ ரகசியங்கள் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தொடர்பான ரகசிய…

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை விரைவில் பிடிக்கப் போவதாக இங்கிலாந்து…

தலைமறைவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதியை விரைவில் உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் போவதாக அந்த அமைப்புக்கு எதிரான கூட்டமைப்பில் உள்ள இங்கிலாந்தின் ராணுவ தலைமை கமாண்டர் கிரிஸ் ஜிகா (Chris Ghika)அறிவித்துள்ளார். மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து 13 மாத பயணத்துக்குப்…

செளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30…

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய்யின் விலை திங்களன்று சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு செளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோவின் இரண்டு வளாகங்களில் நடைபெற்ற தாக்குதலால் விலை நடைபெற்றுள்ளது. செளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில்…

செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா…

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது…

செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை…

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

மெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள் – என்ன நடந்தது?

தடயவியல் துறை வல்லுநர்கள் மெக்சிகோவில் உள்ள ஜலிஸிகோ மாநிலத்திலிருந்து 44 உடல்களைக் கண்டெடுத்து உள்ளனர். அந்த கிணற்றிலிருந்து மனித உடல்களின் சிதிலங்கள் 119 கறுப்புப் பையிலிருந்து எடுத்துள்ளனர். கிணற்றிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது என அதன் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர். ஜலிஸிகோ மாநிலமானது மெக்சிகோ நாட்டின்…

அமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு – மின்சாரத்தை வெளியேற்றும் விலாங்கு

பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் 'போராக்' என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டபிடிக்க முயன்று வந்தார். இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ரப்பர் கையுறைகளை எப்போதும் அவர் அணிந்திருந்தாலும், சில வேளைகளில் மின்சார…

சௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘டிரோன்’ தாக்குதல்

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது. இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார்…