பிரான்ஸ் நாட்டில் மீண்டும் தஞ்சம் கோரிய ஸ்னோடன்!

அமெரிக்கா, பிறநாடுகளை கண்காணித்தது தொடர்பான ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா ராணுவ ரகசியங்கள் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தொடர்பான ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்தினார்.

இதில் அமெரிக்கா தங்களுடனான நட்பு நாடுகளை கண்காணிப்பது குறித்த தகவல், வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த அமெரிக்கா, ஸ்னோடனை கைது செய்யும் அபாயம் ஏற்பட்டதால் அவர் அமெரிக்காவைவிட்டு வெளியாறினார்.

தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும், ஸ்னோடன் பல ஐரோப்பிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டிருந்தார். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அப்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டேயிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பிரான்ஸ் நாட்டு அதிபர் எம்மானுவேல் மேக்ரானிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

-athirvu.in