இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டு விட வாய்ப்பு!

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ஜம்மு-காஷ்மீரை…

அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் –…

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த வரியை நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக…

ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின!

ஈராக்கை ஒட்டியுள்ள தீவுப் பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது, அமெரிக்க விமானப்படை 40 டன் அளவிற்கு குண்டுகள் வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் ஓடும் டைகிரிஸ் நதியின் நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவுப் பகுதி உள்ளது. இங்கு ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படையினருக்கு…

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா?…

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம்…

அணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்

கொரிய பிராந்தியத்தை அணுஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சரான சோ சோன்-ஹுய் தெரிவிக்கையில், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு விரிவான…

தாலிபன்களை சந்திக்க மறுத்த டிரம்ப் – ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு ரத்தானது…

தங்களுடனான பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகினால் தங்களைவிட அமெரிக்காவுக்கே அதிக இழப்பு என்று தாலிபன் அமைப்பு கூறியுள்ளது. சென்ற மாதம் வரை எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. தாலிபன் அமைப்பினர் உடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு…

‘பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்; பாதிப்பேர் 75 வயதுக்கும்…

பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில்…

ஹோண்டுராஸ்: மக்கள் பணத்தில் நகை வாங்கிய அதிபரின் மனைவிக்கு 58…

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். 52 வயதான பொனிலா அவர் கணவர் போர்ஃபிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து…

ஹாங்காங் போராட்டம் : டிரம்பிடம் கோரிக்கை விடுக்கும் போராட்டக்காரர்கள்

ஹாங்காங் போரட்டக்காரர்கள் அங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் டொனால்டு டிரம்பின் உதவி கேட்டு போரட்டம் நடத்தி வருகிறார்கள். சிலர், "அதிபர் டிரம்ப் ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் மற்றும் ஹாங்காங்கை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டுவாருங்கள்." என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் அரசு போராட்டக்காரர்களின் முக்கிய…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார்

தாலிபன் அமைப்பினர் உடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தாலிபன் தலைவர்களை சந்திக்க இருந்தார் டிரம்ப். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்ற பிறகு,…

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு; புதின்!

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5-வது கீழைப் பொருளாதார பொதுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான…

ராபர்ட் முகாபே – வெள்ளையர் ஆட்சியை அகற்றி ஜிம்பாப்வே அதிபரான…

ஜிம்பாப்வே விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவரான ராபர்ட் முகாபே தனது 95வது வயதில் மரணமடைந்தார். நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (ஜிம்பாப்வேயின் முன்னாள்…

இரான் கப்பலின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் டாலர்…

சர்ச்சைக்குரிய இரான் எண்ணெய்க் கப்பலை, அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த கப்பலின் கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மின்னஞ்சல் செய்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையே ஒப்புக்கொண்டது. அட்ரியன் டர்யா-1 (பழைய பெயர் கிரேஸ்…

அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்துகிறது இரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் இரான் நீக்க இருக்கிறது. 2015 அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறது இரான். செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை உருவாக்க தொடங்கிவிட்டதாக அந்நாட்டுத் தலைவர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அணு…

அமேசான் தீ விபத்துக்கு பிரேசில் அதிபரே காரணம்!

பிரேசிலில் அமேசான் காடுகளில் கடந்த 48 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தேசிய விண்வெளி ஆய்வு மையம் எடுத்த படங்களின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமேஸான் காடுகளில்…

அமெரிக்கா – தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் – டிரம்பின்…

தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதியான சல்மே கலீல்சாத், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…

பஹாமாஸை சூறையாடும் டோரியன் சூறாவளி

பஹாமாஸ் தீவுகளில் இதுவரை டோரியன் புயலால் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமாஸ் பிரதமர், ஹுபெர்ட் மின்னிஸ் புயலின் தாக்கம் அதிகம் இருந்த வட கிழக்கு தீவான அபாகோவில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கூற்றுப்படி, சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்திருக்கும் என…

காட்டுத் தீயை அணைக்க களமிறங்கிய அதிபர்!

பொலிவியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில்அந்நாட்டு அதிபரே களமிறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அமேசானின் காட்டூத் தீயானது பொலிவியாவின் பராகுவே எவ்வையை ஒட்டிய சவான்னாவிலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட வனத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன. தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் இருந்து சூப்பர்…

யானை குட்டி விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை

ஆப்ரிக்காவை சேர்ந்த குட்டி யானைகளை அவற்றின் இயற்கையான வன சூழலில் இருந்து பிரித்து உயிரியல் பூங்காக்களுக்கு விற்பனை செய்வதை ஏறக்குறைய முழுமையாக தடை செய்யும் தீர்மானத்துக்கு ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அருகி வரும் உயிரினங்களை வைத்து சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தகம் குறித்த இந்த மாநாட்டின்…

அமேசான் தீ: 22 மில்லியன் டாலர் உதவி வழங்கும் ஜி…

அமேசான் பிரேசிலுக்கு சொந்தமானது இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மக்ரூங் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் மட்டுமே, அமேசான் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 22 மில்லியன் டாலர் உதவியை ஏற்றுக் கொள்ள முடியும் என பிரேசில் அதிபர் போல்சனாரூ தெரிவித்துள்ளார். மக்ரூங்கின் கருத்து ’அவமதிப்பானது’…

அமேசான் காட்டுத் தீ குறித்து ஜி7 மாநாட்டில் பேச்சு: ஒருமித்த…

அமேசான் மழைக்காட்டில் உருவான காட்டுத் தீயை அணைப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நிலைக்கு, ஜி 7 மாநாட்டுக்கு வந்துள்ள உலகத் தலைவர்கள் நெருங்கி வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், காட்டுத்தீயை அணைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிக்கு…

அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத ராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?

பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா காலங்காலமாக செலுத்தி வந்த ஆதிக்கம் தற்போது இல்லாமல் போய்விட்டது. சீனாவின் விரைவான ராணுவ நவீனமயமாக்கல் மூலம் அந்நாடு "புதியதொரு ஆதிக்க நிலையை" நோக்கி செல்வதாக வல்லுநர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். ஆனால், தற்போதைக்கு இது பொருந்தாத ஒன்றாக மாறிவிட்டது. முன்பிருந்ததை விட சீனாவின்…

ஜி7 மாநாட்டில் திடீரென கலந்து கொண்ட இரான் அமைச்சர்: வியப்பில்…

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென இரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு பியரிட்சில் நடைபெற்றது. இரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும்…