இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு; புதின்!

இந்தியா, ரஷ்யா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற, 5-வது கீழைப் பொருளாதார பொதுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

சில கப்பல்களை இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளதாகவும், அதன்படி கப்பல்களில் பகுதி அளவுக்கு ரஷ்யா கட்டும் என்றும் அதனை மெருகேற்றும் பணியை இந்திய கப்பல் கட்டும் தளங்கள் செய்யும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றை ரஷ்யாவின் ரோஸ்நெட் நிறுவனம் வாங்கி உள்ளதாகத் தெரிவித்த அவர், அதுபோறு ஒத்துழைப்புக்கான பல துறைகள் உள்ளதாகவும் கூறினார்.

-https://athirvu.in