ஹாங்காங் போராட்டம் : டிரம்பிடம் கோரிக்கை விடுக்கும் போராட்டக்காரர்கள்

ஹாங்காங் போரட்டக்காரர்கள் அங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் டொனால்டு டிரம்பின் உதவி கேட்டு போரட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிலர், “அதிபர் டிரம்ப் ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் மற்றும் ஹாங்காங்கை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டுவாருங்கள்.” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங் அரசு போராட்டக்காரர்களின் முக்கிய நிபந்தனைகளுள் ஒரு நிபந்தைனையை நிறைவேற்றிய போதும் இந்த போரட்டம் 14ஆவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் பிற நாடுகள் யாரும் தலையிட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது.

ஒரு காலத்தில் பிரிட்டனின் அதிகாரத்தில் இருந்த ஹாங்காங் 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே ஹாங்காங்கின் இந்த நிலைமை உள்நாட்டு விவகாரம் என சீனா கூறியுள்ளது.

trumpபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால் இன்று நடந்த போரட்டத்தில் அமெரிக்க கொடியை ஏந்தி சீனாவிடமிருந்து ஹாங்காங்கை விடுதலை செய்யக்கோரினர் போராட்டக்காரர்கள்.

போராட்டக்காரர்கள் ஹாங்காங்கின் சேனேட்டர்களால் அடுத்த வாராத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட ஹாங்காங் மனித உரிமை மற்றும் குடியரசு சட்டத்தை நிறைவேற்றக் கோரி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சட்டம் நிறைவேற ஹாங்காங்கின் உயர்நிலை தன்னாட்சியை அமெரிக்கா வருடம் தோறும் உறுதி செய்ய வேண்டும்.

போராட்டகாரர்கள் அமெரிக்க தேசிய கீதத்தை பாடிக் கொண்டு, கையில் அமெரிக்க கொடியை ஏந்திக் கொண்டு, “5 நிபந்தனைகள் அதில் ஒன்றுகூட குறையக்கூடாது.” என முழக்கமிட்டனர்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை

protestersபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

போராட்டக்காரர்கள் முதலில் குற்றம் செய்தவர்கள் என சந்தேகபடுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தப்படும் சட்டத்தை மட்டும் விலக்குவதற்காக போராடினார்கள்.

பல லட்ச மக்கள் ஒன்று திரண்டப்பின் இந்த சட்டம் முதலில் ஜுன் மாதம் நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு ஒரு வாரம் முன்னர் முழுவதுமாக விலக்கப்பட்டது. ஆனால் இந்த நேரத்தில் போரட்டகாரர்கள் இன்னும் சில மாற்றங்களுக்காக சில நிபந்தனைகளை வைத்தார்கள்.

இவையே அந்த நிறைவேறாத 4 நிபந்தனைகள்

  • அதிகாரிகளால் போரட்டத்தை கலவரம் எனக் கூறப்பட்டதை திரும்பப்பெறுவது
  • போரட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது
  • காவல்துறையினரின் அத்துமீறலை விசாரணை செய்வது
  • ஹாங்காங் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை

சிலர் ஹாங்காங் தலைவர் கேரி லேம் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

protestersபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால் இந்த போராட்டம் சில சமயங்களில் வன்முறையாக மாறியது.

சனிக்கிழமையன்று போராட்டக்காரர்கள் விமான நிலையத்துக்கு உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது காவல் துரையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின் அன்று இரவு காவல்துரையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு புகைகுண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.

அமெரிக்காவின் தலையீடு

xi jingpingபடத்தின் காப்புரிமைELVIS

அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங் தன்னுடைய மக்களை மதிப்பவர் என கூறியிருந்தபோதும் அமெரிக்காவிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ஷீ ஜின்பிங் இந்த ஹாங்காங் பிரச்சனையை விரைவில் தீர்ப்பார் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை என டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

ஆனால் சீனா வேறு யாரும் இதில் தலையிட வேண்டாம் என எச்சரித்தது. மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் போராட்டகாரர்களை ஊக்குவிப்பதாக குற்றசாட்டையும் வைத்தது.

ஹாங்காங்கில் வருகை தரும் அமெரிக்க மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சீனாவுக்கு எதிராக பிரசாராம் செய்வதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. -BBC_Tamil