காட்டுத் தீயை அணைக்க களமிறங்கிய அதிபர்!

பொலிவியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில்அந்நாட்டு அதிபரே களமிறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமேசானின் காட்டூத் தீயானது பொலிவியாவின் பராகுவே எவ்வையை ஒட்டிய சவான்னாவிலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட வனத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.

தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டேங்கர் என்ற போயிங் 747 விமானத்தை பொலிவியா குத்தகைக்கு எடுத்துள்ளது. 2 ஆயிரம் தீயணைப்பு வீரர்களையும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பொலிவியா ஈடுபடுத்தியுள்ளது.

காட்டுத் தீ விவகாரம் சர்வதேச அளவில் அழுத்தம் தரும் நிலையில் பொலிவியா அதிபர் ஈவோ மெரேலஸ் (Evo Morales), தீயணைக்கும் பணிகளை ஹெலிகாப்டரில் சென்றபடி பார்வையிட்டார். பின் தானும் வனத்தில் களமிறங்கிய ஈவோ, கவச ஆடைகளை அணிந்து கொண்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய பொலிவிய அதிபர் ஈவோ, தீயணைப்புப் பணி எந்த நிலையில் உள்ளது எனக் கேட்டறிந்தார்.

-athirvu.in