அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத ராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?

பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா காலங்காலமாக செலுத்தி வந்த ஆதிக்கம் தற்போது இல்லாமல் போய்விட்டது.

சீனாவின் விரைவான ராணுவ நவீனமயமாக்கல் மூலம் அந்நாடு “புதியதொரு ஆதிக்க நிலையை” நோக்கி செல்வதாக வல்லுநர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர்.

ஆனால், தற்போதைக்கு இது பொருந்தாத ஒன்றாக மாறிவிட்டது. முன்பிருந்ததை விட சீனாவின் ராணுவம் மேம்பாடு அடைந்திருப்பது உண்மைதான். குறிப்பாக, அமெரிக்க ராணுவத்துக்கே சவால் அளிக்கக் கூடிய பல முன்னேற்றங்களை சீனா கண்டிருக்கலாம். எனினும், நீங்கள் நினைக்கும் அளவுக்கு சீனா பெரிய நிலையை அடையவில்லை என்று கூறுகிறது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவு.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு திட்டம் “முன்னெப்போதுமில்லதாக வகையில் நெருக்கடி நிலையில் உள்ளது” என்றும், சீனாவுக்கு எதிராக தனது நட்பு நாடுகளை பாதுகாக்க வாஷிங்டன் போராடக்கூடும் என்றும் அது எச்சரிக்கிறது.

“இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா இனி ராணுவ முன்னுரிமையைப் பெறாது”, மேலும் “அதிகார சமநிலையை நிலைநிறுத்துவதற்கான அதன் திறன் எதிர்மறையான நிலையை நோக்கி சென்று வருகிறது” என்று அது குறிப்பிடுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முக்கிய ராணுவ தளங்களை அச்சுறுத்தும் பெய்ஜிங்கின் அசாதாரணமான ஏவுகணைகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரான செயல்பாட்டின்போது, உடனடி தாக்குதலை நடத்துவதற்கு வித்திடும் என்றும் அது கூறுகிறது.

அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத இராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இப்போது சீனாவின் உலகளாவிய அணுகல் என்பது அதன் பொருளாதாரத்தின் வலிமையை பொறுத்தது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா உலகின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தியதை போல இதற்கு தேவையான நுணுக்கங்களை செயல்படுவதுவதில் சீனா பின்தங்கியுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைவிட அமெரிக்க ராணுவம் இன்னமும் அணுசக்தி உள்ளிட்டவற்றுடன் பல மடங்கு பலமுடன் திகழ்ந்து வருவதாக பல்வேறு ஆய்வறிக்கைகளின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு, அடுத்த தலைமுறைக்கான போர் விமானங்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப சார்த்த ராணுவ கூறுகளில் அமெரிக்க இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசியாவில் இருக்கும் அதிகளவிலான நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் நேட்டோ மூலமாக அமெரிக்கா ஆழமான, நம்பிக்கை நிறைந்த கூட்டணியை நிர்வகித்து வருகிறது.

அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத இராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?

இதுபோன்றதொரு கட்டமைப்பை சீனா கொண்டிருக்கவில்லை. எனினும், அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை பின்னுக்கு தள்ளும் நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. சீனாவை பொறுத்தவரை ஆசிய பிராந்தியத்தில் கவனம் செலுத்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, தனது அமைவிடம் சூழ்ந்துள்ள உலகின் மிகப் பெரிய பரப்பில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது சீனா. இந்த வகையில் ஆசிய பிராந்தியத்தின் ராணுவ வல்லரசு என்ற நிலையை சீனா அடைந்துவிட்டது என்று கூற முடியும்.

அமெரிக்காவின் ராணுவ திறன்களை ஆய்வு செய்த சீனா, அதன் அடிப்படை கட்டமைப்புக்கு சவால் விடக் கூடிய வலிமைமிக்க திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தனது இடத்தில் இருந்து கொண்டே நீண்ட தூரத்தில் இருக்கும் அமெரிக்க படைகளுக்கு சவால் கொடுக்கக் கூடிய உணரிகள் (சென்சார்கள்) மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை மேம்படுத்துவதில் சீனா அதீத கவனம் செலுத்தி வருகிறது.

தொடக்கத்தில் அமெரிக்காவிற்கெதிரான சீனாவின் தற்காப்பு நடவடிக்கையாக இவற்றை கருதிய வல்லுநர்கள், தற்போது அது அமெரிக்காவின் எவ்வித ராணுவ நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

“சீனாவின் இடைமறித்து தாக்கக் கூடிய அமைப்புகள், இந்தோ-பசிபிக்-க்குள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் அமெரிக்காவின் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இதன் மூலம் அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாகவே குறைந்தபட்ச படையை கொண்டு சீனா வெற்றிபெறுவதற்கு இது வித்திடக் கூடும்” என்று சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத இராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே வேளையில், தென் சீனக் கடல் பகுதியிலுள்ள முதலாம் தீவு சங்கிலி என்றழைக்கப்படும் ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்காமல் பார்த்துக்கொள்வதே தற்போதைக்கு சீனாவுக்கு உள்ள மிகப் பெரிய பணி.

மேலும், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள குவாம் வரை விரிந்துள்ள இரண்டாவது தீவுச் சங்கிலி என்றழைக்கப்படும் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது.

தனக்கு மிகப் பெரிய சவாலாக சீனா உருவெடுத்துவது வருவது குறித்து அமெரிக்காவுக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட முடியாது. பல ஆண்டுகளாக சீனாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, தனது தசாப்தகால ராணுவ கட்டமைப்பை காலத்திற்கேற்றவாறு மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பனிப்போரின் போது சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் ஒரே இலக்காக இருந்தது. தற்போது அந்த இடத்தை சீனா பிடித்துள்ளது என்றே கூறலாம்.

இருப்பினும், அமெரிக்கா தனக்கு முன்னுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு போதுமான கவனம் செலுத்துகிறதா என்று கேள்வி எழுப்புகிறது சிட்னி பல்கலைக்கழக அறிக்கை. “காலாவதியான வல்லரசு மனப்பான்மையை கொண்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, அதன் திறனைக் குறைப்பது மட்டுமின்றி, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் மீண்டும் முழுவதுமாக கோலேச்சுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்களை உண்டாக்கலாம்” என்று அது கூறுகிறது.

அமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக்க முடியாத இராணுவ வல்லரசாக நீடிக்கிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது இடத்தை தக்க வைப்பதற்காக அமெரிக்கா பெருமளவிலான நிதியை ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளில் செலவிட உள்ளது.

“உலகின் ராணுவ வல்லரசை நிர்ணயிக்கும் போட்டிக்கு அமெரிக்கா போதுமான அளவு தயாராக இல்லை, தனது பலத்தை காட்டும் நடவடிக்கைகளை அது எடுக்கவில்லை.” அதே வேளையில் நவீனமயமாக்களில் முன்னுரிமையின் அடிப்படையில் அமெரிக்கா போதிய அளவு கவனம் செலுத்தாத பட்சத்தில், அது ஒருகட்டத்தில் அந்நாட்டின் நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த மதிப்பை விட அதிகமான அளவு நிதியை செலவிடக் கூடிய நிலைக்கு தள்ளப்படும்.

ஆஸ்திரேலிய பிராந்தியத்தில், வாஷிங்டனின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றிலிருந்து ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தால் எழுதப்பட்ட ஒரு முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சீன பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்-பிங்கின் தொனியிலிருந்தே அவர்களது தற்போதைய நிலையை அறியலாம்.

அது மட்டுமின்றி, அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா எடுத்துள்ள நிலைப்பாடு, நீண்டகால அடிப்படையில் அந்நாட்டிற்கு வலு சேர்க்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். -BBC_Tamil