அமேசான் பிரேசிலுக்கு சொந்தமானது இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மக்ரூங் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் மட்டுமே, அமேசான் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 22 மில்லியன் டாலர் உதவியை ஏற்றுக் கொள்ள முடியும் என பிரேசில் அதிபர் போல்சனாரூ தெரிவித்துள்ளார்.
மக்ரூங்கின் கருத்து ’அவமதிப்பானது’ என்று போல்சனாரூ தெரிவித்துள்ளார்.
போல்சனாரூவின் இந்த அறிவிப்பு, ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வழங்க முடிவு செய்த 22 மில்லியன் டாலர்களை பிரேசில் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என போல்சனாரூவின் தலைமை அலுவலர் தெரிவித்த பிறகு வந்துள்ளது.
- அமேசான் காட்டுத்தீ: 2500 கி.மீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை
- அமேசான் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஒப்பந்தம்: நெருங்கும் உலகத் தலைவர்கள்
அதற்கு முன்னர், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியில் பிரேசில் இந்த பணத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
எனவே இது தொடர்பாக பிரேசில் அரசாங்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரியவருகிறது. இது குறித்து இன்னும் தெளிவான எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. -BBC_Tamil