ஜி7 மாநாட்டில் திடீரென கலந்து கொண்ட இரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென இரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு பியரிட்சில் நடைபெற்றது.

இரான் – அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் இரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் அதிபரோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் சாரிஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. -BBC_Tamil