எகிப்தில் வெடி குண்டு தாக்குதல்: 7 போலீஸார்கள் உட்பட 10 பேர் பலி

எகிப்தின் கிசா மாகாணத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 போலீஸார்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டே மறைந்திருந்து பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக, எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து கடந்த 2013ம் ஆண்டு முதல் சினாய் தீபகற்பத்தில், அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

இதில்  நூற்றுக்கணக்கான போலீஸாரும் இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: