செய்திகள்டிசம்பர் 31, 2017 2018 புத்தாண்டு வாழ்த்து செம்பருத்தி.கோம் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள். செம்பருத்தி குடும்பத்தினர் Related posts 226.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த…சிரம்பானில் குர்ஆனை எரித்த சம்பவம் தொடர்பாக…ஆகஸ்ட் 26 முதல் 31 வரை…உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை தண்டனையை…மாராங் சிறை மோதலில் ஆயுள் கைதி…குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான பெண்ணின்…மோசமான காற்று தரம்பதிவு – பாதிக்கப்பட்ட…சுக்மா போட்டியில் சிலாங்கூர் வெற்றி: செப்டம்பர்…நற்செயல்களுக்கு ஆதரவளிப்போம் மூக்கை நுழைத்து குழப்பக்கூடாதுகாவல்துறையினர் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்; தெற்கு…இறந்த பள்ளி மாணவியின் தாய், தனது…சுபாங் ஜெயா பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த…தேசிய தின ஒத்திகை மற்றும் அணிவகுப்பு:…அன்வார் கலைத்துறையில், குறிப்பாக திரைப்படத் தயாரிப்பில்,…அம்னோ இளைஞர் தலைவர்கள் பாஸ் இளைஞர்…தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியாவும் இந்தோனேசியாவும்…இந்திராவின் 100 மில்லியன் ரிங்கிட் கோரிக்கையை…ஜாஹித்: மலாக்காவில் BN கூட்டணி அமைப்பது…அருகிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடியவர்களைப்…படுக்கையில் இருக்கும் நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கான மாதாந்திர…சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக சாலையை…வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக் கவனிக்க குடும்பங்களுக்கு…புகைமூட்டம் காரணமாக ஆஸ்துமா மற்றும் சுவாசப்…அரசு பாதுகாப்பு படை வீரர் நாகப்பாம்பு…மலேசியா–பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்பு ஒப்பந்தம்; பினாங்கு…
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து! இதோ.. வருகிறாள் 2018 என்னும் இங்கிலாந்து பெண்.. அரை ஆடை கலாச்சாரத்தை என் கிராமத்து பெண்ணுக்கும் கற்றுக்கொடுத்த ஆங்கிலேயத்து அரண்மணைக்காரி.. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இளமை மாறாமல்.. எங்களின் நாகரீகம் அழித்து.. எங்களின் வாழ்வியல் கலாச்சாரம் கலைத்து.. ஏ… புத்தாண்டே.. உன்மீது எனக்கு …ஒருபோதும் வருத்தமில்லை. ஏனெனில். என்று எங்களுக்கு தமிழ் மாதங்கள் மறந்து போனதோ.. திருவள்ளுவர் ஆண்டு தெரியாமல் போனதோ.. அப்போது வந்த வருத்தம் எங்கள்மீதும்.. எங்கள் தமிழ் இனத்தின் மீதும்.. வா.. உன்னையும் கொண்டாடுவோம்.. நாங்கள்.. ஏனெனில் நாங்கள் எங்களின் மொழி மறந்த மனிதர்கள்.. எங்களின் புத்தாண்டை மறந்தாலும்.. உன்னை வானவேடிக்கை இட்டு.. வரவேற்போம்.. ஆங்கில மோகம் கொண்ட அன்புத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@@@ எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? ———————* என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல… படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல… ”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல… நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல…. பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில கேக்கை வெட்டி அரிதாரம் பூசி குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க… உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன் கலாச்சாரம் உனக்கு எதுக்குடா? அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?…. இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?…. இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? —பழ. தமிழார்வன்–
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!
இதோ..
வருகிறாள்
2018 என்னும்
இங்கிலாந்து
பெண்..
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ…
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு …ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
———————*
என் பேரு வில்லியம் இல்ல….
அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…
தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…
’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…
தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…
படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…
”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…
நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….
பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…
உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?
அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….
இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….
இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
—பழ. தமிழார்வன்–
செம்பருத்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆம் புதிய ஆண்டு வாழ்த்துகள்…