நைஜீரியாவில் ராணுவ தளம் மீது போகோஹரம் போராளிகள் தாக்குதல்; 30 வீரர்கள் பலி

கனோ, நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ நகரில் ஜாரி கிராமத்தில் அமைந்த எல்லை அருகே அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது.  அந்நாட்டில் போகோஹர தீவிரவாத அமைப்பினை சேர்ந்த போராளிகள் சிலர் லாரிகளில் கும்பலாக அங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இந்த தகவலை இரு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

-dailythanthi.com

TAGS: