செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும்.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. -BBC_Tamil

TAGS: