கிள்ளான் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு

இன்று பிற்பகல் கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு உணவுக்கூடம் உட்பட, கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலை 4.35 மணிக்கு, பிரிவு 51A-வில் உள்ள மேடான் செலரா 223 உணவுக்கூடத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக ஒரு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மாலை 4.55 மணிக்கு, பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு வெள்ள நீர் இருந்ததைக் கண்டதாகவும் அத்துறை கூறியது.

இருப்பினும், வெள்ள நீர் ஏற்கனவே வடிந்து கொண்டிருந்ததது, உயிரிழப்புகளோ அல்லது மக்கள் வெளியேற்றப்படவோ இல்லை.

இதற்கிடையில், கனமழையைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆம்வே மலேசியாவின் தலைமையகத்தைச் சுற்றியும், அப்பகுதியில் உள்ள பல சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட்டதை ‘த்ரெட்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டின.

 

 

 

-fmt