புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை (CID) தெரிவித்ததாவது, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரில் உள்ள ஐ-சிட்டி (I-City) பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்து 46 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் 48 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக மீட்டனர்.
புகிட் அமான் குற்றப்புலனாய்வு துறை (CID) தலைவர் எம். குமார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அதிகாரிகள் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
பிணையாக ரிம 7 மில்லியன் கோரியதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட ஆறு பேரை கைது செய்து, கடத்தப்பட்ட ஒருவரை 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையின் மூலம் இன்று அதிகாலை சிலாங்கூரில் மீட்டனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் எம். குமார் கூறுகையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில், 46 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் மனைவி தனது கணவர் கடத்தப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் ரிம 7 மில்லியன் பிணைத்தொகை கோரியதாகவும் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
புக்கிட் அமான் CID மற்றும் சிலாங்கூர் CID இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், இன்று அதிகாலை 1 மணியளவில் ஷா ஆலாம் நகரின் ஐ-சிட்டி (I-City) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்து பாதிக்கப்பட்டவர் 48 மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
“அந்த நடவடிக்கையின் போது, 30 முதல் 46 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 1961ஆம் ஆண்டின் கடத்தல் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் 10 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, இதில் தொடர்புடைய பிற நபர்கள் யார், மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பெரிய குற்றவியல் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குமார் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1961ஆம் ஆண்டின் கடத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் 1952ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
























