கூலிம் காவல் துறைத் தலைவர் சியாம்சுல் சின்ரிங், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு சிறுவன் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.
“இன்று கெடா மாநிலம், கூலிம் அருகிலுள்ள தமான் ஈக்கோ ரிம்பா சுங்கை செடிமில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடல்களை அகற்றினர்.”
கெடா மாநிலம் கூலிம் அருகிலுள்ள தாமான் ஈகோ ரிம்பா சுங்கை செடிம் என்ற பிரபலமான நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுவன் உயிர் தப்பினார்.
பெர்னாமா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கூலிம் மாவட்ட காவல் துறைத் தலைவர் சியாம்சுல் சின்ரிங் கூறுகையில், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றார்.
சம்பவம் இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் நடந்தபோது, அப்பகுதியில் இருந்த அவசர எச்சரிக்கை சைரன் செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கூலிம் ஹை-டெக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஹைக்கல் இஸ்வான் நசீர் கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைவரும் மலையின் நடுப்பகுதியில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
























