ம.இ.கா –மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனம் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில் பிரதமர் பங்கேற்று மகிழ்ச்சி

கோத்தா கெமுனிங்கில் உள்ள மேன்ஷன் ஒன்சிடியம் மண்டபத்தில் ம.இ.கா மற்றும் மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனம் (MIED) ஆகியவை இணைந்து இன்று நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டு பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 3,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்தத் தீபத் திருநாள் கொண்டாட்டத்தில், ம.இ.கா தலைவரும் மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத் தலைவருமான எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பிரதமரை வரவேற்றார்.

அன்வார் விருந்தினர்களுடன் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்ததுடன், முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ம.சீ.ச தலைவர் வீ கா சியோங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து விருந்தும் உண்டார்.

மலேசியர்கள் ஆண்டு முழுவதும் நல்லிணக்கத்துடன் வாழவும், பண்டிகைகளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்பதை இந்தக் கொண்டாட்டம் காட்டுவதாக விக்னேஸ்வரன் கூறினார்.

இத்தகைய கொண்டாட்டங்கள் பல்வேறு இனங்களிடையேயான ஒருங்கிணைப்புக்கு ஒரு தெளிவான தளமாக அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது. அரசியல் பின்னணிகளில் வேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகளில் ஒற்றுமைக்காக அவற்றை ஒதுக்கி வைக்க முடியும், என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு உற்சாகமாக அமைந்தது மட்டுமல்லாமல், மலேசியர்களின் தனித்துவமான பன்முகத்தன்மையையும் பிரதிபலித்ததாக வீ கூறினார்.

மலேசியர்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் உண்மையான நல்லெண்ண உணர்வு இதுவாகும்; நமது அன்புக்குரிய நாட்டின் செழிப்புக்காக இது பாதுகாக்கப்பட வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், இந்த ஆண்டு பொது உபசரிப்புக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாகப் பிரதமர் அன்வார் கேக் வெட்டியபோது விக்னேஸ்வரனும் வீயும் அவருடன் உடனிருந்தனர்.

 

 

 

-fmt