செபாங்கில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

செபாங் காவல் துறைத் தலைவர் நூர்ஹிஸாம் பாஹமான் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கனமழையின் போது மின்னல் தாக்கி மூன்று பேர் பலியானதாக நம்பப்படும் பல வீடியோக்கள் முன்னதாக இணையத்தில் வைரலாகின.

இன்று பண்டார் பாரு சாலக் திங்கியில் (Bandar Baru Salak Tinggi) நடந்த ஒரு சம்பவத்தில் மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்டு மூன்று ஆண்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைச் செபாங் (Sepang) மாவட்டக் காவல் துறைத் தலைவர் நூர்ஹிஸாம் பஹாமான் (Norhizam Bahaman) உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, பலத்த மழையின் போது மின்னல் தாக்கி மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்டதாகக் நம்பப்படும் பல காணொளிகள் இணையத்தில் வைரலாகப் பரவின.

அருகில் இருந்த ஒரு காரை பழுதுபார்த்த பிறகு, அந்த மூன்று ஆண்களும் மரத்தடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது என்று நூர்ஹிஸாம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் 16, 18 மற்றும் 26 வயதுடையவர்கள் என்று அவர் கூறினார்.

மேலும், அவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு (Hospital Sultan Idris Shah, Serdang) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நூர்ஹிஸாம் தெரிவித்தார்.