கிளந்தான் மற்றும் பகாங்கில் புதன் கிழமை வரை வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கணிப்பு

கிளந்தானின் ஒன்பது மாவட்டங்களிலும் பகாங்கின் மூன்று மாவட்டங்களிலும் தொடர் கனமழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை நீடிப்பதன் காரணமாக, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று தேசிய வெள்ள முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்மழை காரணமாகக் களந்தானில் (Kelantan) ஒன்பது மாவட்டங்களிலும், பகாங்கில் (Pahang) மூன்று மாவட்டங்களிலும் புதன்கிழமை வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கிளந்தானில் கோத்தா பாரு (Kota Bharu), தும்பாட் (Tumpat), பாச்சோக் (Bachok), மாச்சாங் (Machang), பாசீர் மாஸ் (Pasir Mas), பாசீர் பூத்தே (Pasir Puteh), தானா மேரா (Tanah Merah), கோலா கிராய் (Kuala Krai) மற்றும் ஜெலி (Jeli) ஆகிய மாவட்டங்களும்; பகாங்கில் குவாந்தான் (Kuantan), பெக்கான் (Pekan) மற்றும் ரொம்பின் (Rompin) ஆகிய மாவட்டங்களும் இதில் அடங்கும்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தொடர்மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய வெள்ள முன்னறிவிப்பு மையம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கிளந்தான், கோலோக் (Golok) மற்றும் கெமாசின் (Kemasin) ஆகிய நதிப் படுகைகளில் உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

குவாந்தானில் குவாந்தான், லெம்பிங் (Lembing), கெனாவ் (Kenau), பெசெரா (Beserah), பெலாட் (Belat) மற்றும் சோய் (Soi) நதிப் படுகைப் பகுதிகளும்; பெக்கான் மாவட்டத்தில் பெபார் (Bebar), மியாங் (Miang), பகாங் (Pahang) மற்றும் மெர்சுங் (Mercung) நதிப் படுகைகளும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் அடங்கும். ரொம்பினில் எண்டாவ் (Endau), ரொம்பின் (Rompin) மற்றும் பொந்தியான் பகாங் (Pontian Pahang) நதிப் படுகைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும்.