கணிசமான மற்றும் தொடர்ச்சியான பலத்த மழை மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக, நீர்மட்டம் திடீரென உயரவும் வெள்ளப்பெருக்கு அல்லது நீர்அலை (water surge) ஏற்படவும் வாய்ப்புள்ளது எனத் துறை தெரிவித்துள்ளது.
கோலா குபு பாரு, சிலாங்கூர், சுங்கை பெர்தாக் பகுதியில் நேற்று மலையேற்றம் மேற்கொண்டபோது, திடீர் நீர்ப்பெருக்கு ஏற்பட்டதில் வலுவான நீரோட்டத்தால் எட்டு பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழைக்காலம் முழுவதும் ஆறுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களில் குளித்தல், நீந்துதல், பிகினிக் மற்றும் முகாம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்துப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
க கணிிக்க முடியாத வானிலை மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என்றும், வலுவான நீரோட்டங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு (water surges) ஏற்பட்டு பொதுமக்களுக்குக் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.
“வெள்ளப்பெருக்கு கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடும். நீரோட்டம் வலுவடையும் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுங்கள். பாதுகாப்பிற்கும் உயிர் பாதுகாப்பிற்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று பெர்னாமா செய்தி நிறுவனம் வாயிலாக அத்துறை தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து, விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
“அவசர காலத்தில், பொதுமக்கள் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து, சம்பவம் நடந்த இடத்தைப் பற்றிய விவரங்களை மீட்புக் குழுவினருக்கு வழங்க வேண்டும்,” என்று அது கூறியுள்ளது.
நேற்று சிலாங்கூர், கோலா குபு பாருவில் உள்ள சுங்கை பெர்தாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் நடைபயணம் (hiking) மேற்கொண்ட 8 பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
அதே பகுதியில் சிக்கித் தவித்த மேலும் 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
























