பண்டார் டெக்னாலஜி காஜாங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகைக்கடையில், பாராங் கத்தி மற்றும் சுத்தியல்களுடன் கொள்ளையடித்ததாக நம்பப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு மூன்று கொள்ளையர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாகக் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். மொத்த இழப்பின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி நபில் ஐசாத்தை 013-6232713 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
-fmt
























