கோல லங்காட் பள்ளியில் உணவு நச்சான சம்பவம் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை

கோல லங்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட உணவு நச்சு சம்பவம் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

எஸ்.பி.எம் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்களின் தேர்வுத் தயாரிப்புகளும், தேர்வில் பங்கேற்கும் திறனும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சுல்கெப்லி அகமது அறிவுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு இது குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக நான் அறிகிறேன்; இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்த பதில்கள் விரைவில் கிடைக்கும்.

“நமது பிள்ளைகளின் தேர்வுக் காலம் எவ்வித இடையூறுமின்றி நடைபெற வேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன். தேர்வு எழுதும் நேரத்தில் அவர்கள் இதுபோன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கோல சிலாங்கூரில் உள்ள செகோலா கெபாங்சான் புஞ்சாக் ஆலம் 3 பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று, கோல லங்காட், ஜெஞ்சாரோமில் உள்ள ஒரு பள்ளியில் பல மாணவர்களுக்கு ஏற்பட்ட உணவு நச்சு சம்பவத்திற்கு, முறையாகப் பதப்படுத்தப்படாத ‘அயாம் கெபுக்’ உணவுப் பதார்த்தமே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி தெரிவித்திருந்தார்.

பள்ளியின் மாணவர் நலன் பிரிவு மூத்த உதவியாளரின் விரைவான நடவடிக்கையால், பாதிக்கப்பட்ட 11 மாணவர்களுக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சையும் மருந்துகளும் கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தது என்று அமிருதீன் கூறினார்.

 

 

-fmt