GE15 அனைத்துக் கட்சிகளுக்கும் கடினம் – துங்கு ரசாலி

குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா 15 வது பொதுத் தேர்தல் அனைத்து போட்டியிடும் கட்சிகளுக்கும் கடினமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். எந்தவொரு அரசியல் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாது என்று மூத்த சட்டமன்ற உறுப்பினர் கணித்துள்ளார். GE15 மிகவும்…

20 குழந்தைகளில் ஒருவருக்கு மனநல பிரச்சனை உள்ளது – சுகாதார…

மலேசியாவில் 5 முதல் 9 வயதுடைய 20 குழந்தைகளில் ஒருவருக்கு வளர்ச்சிக் கோளாறுகள் உள்ளிட்ட மனநலக் கோளாறுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி(Dr Noor Azmi Ghazali) (மேலே) கூறினார். 2019 ஆம் ஆண்டின் தேசிய சுகாதார மொபிலிட்டி கணக்கெடுப்பு…

விலைவாசி 4.4% உயர்ந்துள்ளது

மலேசியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (y-o-y) 2022 ஜூலையில் 4.4% அதிகரித்து 127.9 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 122.5 ஆக இருந்தது. மலேசிய புள்ளியியல் துறை (Department of Statistics Malaysia) தலைமை புள்ளியியலாளர் முகமது உசீர் மஹிடின், உணவுக் குறியீடு 6.9%…

வெளிப்படையான தீர்ப்பு நம்பகமான நீதி அமைப்பைப் பிரதிபலிக்கிறது – பேராக்…

ஒரு வெளிப்படையான தீர்ப்பு நம்பகமான நீதி அமைப்பைப் பிரதிபலிக்கிறது, அது யாருக்கும் பயப்படாது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார். நீதி அமைப்பில், நீதிபதி ஒரு முக்கியமான பாத்திரம் என்றும், நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறார் என்றும் அவர் கூறினார்.…

ஒரு கிலோ கோழி உச்சவரம்பை ரிம9.40 ஆக அரசு தொடரும்

ஒரு கிலோகிராம் கோழிக்கு ரிம9.40 என்ற உச்சவரம்பைத் தொடர அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) அமைச்சரவை ஒருமித்த முடிவை எட்டியது என்று கூறிய அவர், பல தரப்பினரின் கருத்துகளுக்குப்…

ரொட்டி விலை ஏற்றம் – புதிய குறைந்தபட்ச ஊதியம், வெள்ளம்,…

ரிம.1,500 குறைந்தபட்ச ஊதியம், கடந்த ஆண்டு ஷாஅலமை தாக்கிய அபாய வெள்ளம் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி இடையூறுகள் ஆகியவை Gardenia Bakeries (KL) Sdn Bhd செப்டம்பர் 1 முதல் அதன் விலைகளை உயர்த்த வேண்டியதற்கான காரணங்களில் அடங்கும். நேற்று ஒரு அறிக்கையில், பேக்கரி இந்தச் சவால்கள்…

மார்ச் முதல் 2023 பள்ளி நாட்காட்டி திட்டமிட்டபடி இருக்கும்

2023ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வி நாட்காட்டி மார்ச் முதல் இயங்கும். மேலும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டபடியே இருக்கும் என்று மூத்த கல்வி அமைச்சர் முகமட் ரட்ஸி ஜிடின்(Mohd Radzi Jidin) தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும்…

2022 தேசிய தின கொண்டாட்டங்களின்போது ட்ரோன்கள் பறப்பதைத் தவிர்க்கவும்

ஆகஸ்ட் 31 அன்று மெர்டேக்கா சதுக்கத்தில் 2022 தேசிய தின கொண்டாட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் என்று மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், (Civil Aviation Authority of Malaysia) இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல்…

அம்னோ சிறப்பு பொதுக் குழு கூட்டம் , பலத்தைக் காட்ட…

நேற்று அம்னோ நடத்திய சிறப்புக் கூட்டம், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் கட்சியின் "பலத்தை காட்டுவதற்காக " நடத்தப்பட்டது என்று விவரிக்கப்பட்டது. நஜிப் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் அவருக்கு முன்னோடியாக இருந்த நஜிப்…

சரவாக் காவல்துறையினர் குடும்பத்தலைவிகளை குற்ற ஒழிப்பு பணியில் சேர்த்துள்ளனர்

சரவாக் போலீசார் இன்று தொடங்கப்பட்ட சரவாக் படைப்பிரிவின் சிறப்புப் பெண் பணியாளர் பிரிவு, வீட்டுவசதி தோட்ட தத்தெடுப்பு திட்டத்தின் மூலம் வீட்டுத் தோட்டப்புறங்களில் குற்றங்களை எதிர்த்துப் போராட மாநிலத்தில் இல்லத்தரசிகளின் பங்கேற்பை அணிதிரட்டுவார்கள். சரவாக் போலீஸ் கமிஷனர் முகமது அஸ்மான் அகமது சப்ரி கூறுகையில், தோட்ட தத்தெடுப்பு முன்முயற்சியானது,…

முகைடின்: பட்ஜெட் தாக்கல் செய்வதில் நிதி அமைச்சர் பொறுப்பை பிரதமர்…

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அக்டோபர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸின் பொறுப்பைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முகைடின் யாசின் கூறினார். மூன்று வாரங்களுக்கு முன்பு, அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் அடுத்த…

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை: உச்ச நீதிமன்றத்தில் ‘குடும்பமே முன்னிலை’…

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் மலேசிய  தந்தையர்களுக்கு உள்ள அதே உரிமையை மலேசிய தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரி 'குடும்பமே முன்னிலை' (Family Frontiers) என்ற குழு மற்றும் ஆறு மலேசிய தாய்மார்கள் இன்று  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மலேசிய தந்தையர்களைப் போலவே மலேசியத்…

அம்னோ கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால் இஸ்மாயிலுக்கு ‘நல்ல…

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பதவி நீக்கம் செய்ய அம்னோ கட்சி தேர்வு செய்தால் அவருக்கு "நல்வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தியுள்ளார். “அம்னோ பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்தால், இஸ்மாயிலுக்கு நல்ல அதிர்ஷ்டம். இந்த விவகாரம் குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை,…

முகைடின்: PN, BN பெயர் ஒன்று போல் இருந்தாலும், “வானமும்…

பெரிகத்தான் நேசன்ல் (PN) தலைவர் முகைடின்யாசின் அடுத்த பொதுத் தேர்தலில் BN-க்கு வாக்களிக்க வேண்டாம் என்று மலேசியர்களை வலியுறுத்தியுள்ளார், ஏனெனில் இது மக்களைச் சாதகமாகப் பயன்படுத்தும் ஒரு கூட்டணி என்று அவர் கூறினார். BN உடன் ஒப்பிடுகையில், PN நிர்வாகம் உண்மையில் மக்களின் மீது அக்கறை கொண்டிருந்தது மற்றும்…

பிகேஆரின் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள் – ரஃபிஸி

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, 15வது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாத கால இடைவெளியில் கட்சி தனது இறுதிப்பட்டியலில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். பாரிசான் நேசனலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியின் அடிமட்ட மக்களுக்கு பங்கு உண்டு, எனவே இதை ஒரு "போர்" என்று முத்திரை…

துப்புரவாளர்கள், பாதுகாவலர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை – MTUC…

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள சில ஒப்பந்த துப்புரவாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவதாகக் கூறுகிறது புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500 நடைமுறைக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் இது நிகழ்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர். இன்று ஒரு அறிக்கையில்,…

பிரதமர் இஸ்மாயிலை கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்குவதா ?…

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க உள்கட்சி அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவது அனைத்தும் பொய் என்று அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அம்னோவை சீர்குலைக்க நினைப்பவர்களால் இந்தக் கூற்றுகள் பரப்பப்பட்டதாக துணைத் தலைவர் மஹட்சிர் காலிட்…

பழைய ஒப்பந்தங்களின் கீழ் உள்ள துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு குறைந்தபட்ச…

அரசு நிறுவனங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாததால் அவர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தங்களுடைய தற்போதைய ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்படவேண்டும், எனவே இந்த ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு…

சுல்தான் நஸ்ரின்: யாழ்ப்பாணத் தமிழர்கள் மலேசிய சமூகத்தில் முக்கிய பங்கு…

மலேசிய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது எனப் பேராக் சுல்தான் நஸ்ரின் தெரிவித்தார். வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு, குறிப்பாக உணவுகளில் பெயர்பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் மருத்துவம், கல்வி மற்றும் பொறியியல், அரசியல், சிவில் சேவை மற்றும் சட்டம் போன்ற துறைகளில் செல்வாக்குமிக்க…

போலீசார்: நஜிப்புக்காக அரண்மனையில் கூடிய கூட்டம் சட்டதிற்கு புறம்பானது

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவிற்கு வெளியே நேற்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் கூடியிருந்ததற்கு போலிசாருக்கு முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. யாங் டி-பெர்துவான் அகோங்கிடமிருந்து நஜிப்புக்கு அரச மன்னிப்புக் கோருவதற்காகக்கூடிய இந்தக் குழு நேற்று பிற்பகல் 2 மணியளவில் காணப்பட்டது என்று பிரிக்ஃபீல்ட்ஸ்…

அன்வார்: மடமாளிகையில் இருந்து மத்திய சிறையில் நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கிறார், கிட்டத்தட்ட ஒரு தசாப்தகால சிறைவாச அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அன்வார் மேலும், நஜிப் தனது இரண்டு சிறைத் தண்டனைகளின்போது சிகிச்சை மற்றும் வசதிகளைப் பெறக்கூடும் என்கிறார். ஆனால்…

வெளிநாடுகளில் உள்ள அதிக திறன் வாய்ந்த மலேசியர்களை, மலேசியாவிற்கு அழைத்து…

திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மலேசியா உள்ளூர் திறமைகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஏராளமான மலேசியர்கள் தங்கள் திறமை மற்றும் செயல் திறன்களுக்காக  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு  திரும்பவும் அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று…

ஹடி அவாங்கின் இனவாத கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேணடும்

முஸ்லிம் அல்லாதவர்கள் நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சீரழித்ததாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாவை தளமாகக் கொண்ட இளைஞர் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மாராங் எம்.பி.யின் கருத்துகள் ஆதாரமற்றவை மட்டுமல்ல, நாட்டில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்று…