சைபுடின்: சீனமொழியை ஒழிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

1 ex minisமுன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா,  புதிதாகக் கொண்டுவரப்பட்ட கல்வி செயல்திட்டத்துக்கு சீன மொழியை ஒழித்துக்கட்டும் நோக்கம்  கிடையாது என்றே நம்புகிறார்.

“அது, தொடக்கநிலைப் பள்ளிகளில் சீன மொழியை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அனுமானிப்பது சரியல்ல. பகாசா மலேசியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் (மாணவர்களின்) புலமையை அதிகரிப்பதே அதன் குறிக்கோள்.

“இவ்விவகாரம் பற்றி (சீனக் கல்வித் தரப்பு) டொங் ஜோங் கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்தும் முயற்சிகளைத் தொடர வேண்டும்”, என்றவர் குறிப்பிட்டார்.

TAGS: