உலக அளவில் இடம்பெயர்வோர் எண்ணிக்கை உயர்கிறது

foreign_workersமுன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இடம்பெயர்ந்து செல்வோரில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் கண்டமாக ஐரோப்பா இருக்கிறது. ஆசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் 4 கோடியே 60 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள்.

வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வோர் ஒருபுரம் இருக்க, உள்நாட்டுக்குள்ளும் பெருமளவிலான இடப்பெயர்வுகள் நடக்கின்றன என்றும் ஐநா மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. -BBC