ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஆப்கன் தலைநகர் காபூலுக்கு மேற்கே அமைந்துள்ள ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அதைத்தொடர்ந்து தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆப்கன் அதிகாரிகள் கூறியபோது, 2 கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விட்டு, அமெரிக்க தூதர அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படை பதில் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இந்தத் தாக்குதலில் 2 ஆப்கனியர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் 2 கார் ஓட்டுநர்கள் உள்பட 7 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
தலிபான் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை அதன் செய்தித் தொடர்பாளர் ஹூரி யூசுப் அகமதி, அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தொûலைபேசியில் இதைத் தெரிவித்துள்ளார்.
ஆப்கனின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த தலிபான்கள், தற்போது தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் தங்களது தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.