கடைசி அணு ஆலையை பராமரிப்புக்காக மூடும் ஜப்பான்

japan_ohi_reactorஜப்பான் தன்வசம் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி அணு ஆலையை பராமரிப்புக்காக நிறுத்த ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம், 2011 இல் சுனாமியால் ஃபுக்குசிமா அணு உலை நிர்மூலமாக்கப்பட்டதற்குப் பிறகு, தற்போது இரண்டாவது தடவையாக அந்த நாடு அணு சக்தி இல்லாமல் இருக்கப்போகிறது.

ஃபுக்குசிமா விபத்துக்குப் பிறகு அங்கு இன்னமும் தொடர்ச்சியாக கதிரியக்கம் கசிந்துகொண்டிருக்கிறது.

மேற்கு ஜப்பானில் ஒஹி என்னும் இடத்தில் உள்ள இந்த அணு உலையை மீள ஆரம்பிப்பதற்கு இன்னமும் எந்தவிதமான தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஃபுக்குசிமா பேரழிவுக்கு முன்னர், ஜப்பானின் மொத்த மின்சார உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அணு மின்சாரமாக இருந்துவந்தது.

அணு உலைகளுக்கு மாற்றாக வாயு மற்றும் பெட்ரோலியம் ஆகியவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் பெரும் செலவுகாரணமாக, உலகின் மூன்றவாது மிகப்பெரிய பொருளாதாரமான ஜப்பான் வணிக ஏற்றுமதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. -BBC