வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்த முகாபே சூளுரை

mugabeஜிம்பாப்வேயில் வெளிநாட்டு நிறுவனங்களை தேசியப்படுத்துவது எனும் தனது சர்ச்சைகுரிய திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அதிபர் ராபர்ட் முகாபே உறுதிபூண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்றத் தேர்தலில், அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை முகாபே தெரிவித்தார்.

வெளிநாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை தேசியப்படுத்துவது எனும் தனது திட்டம் முன்பைவிட கூடுதலான தீவிரத்துடன் முன்னெடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது முகாபே சூளுரைத்தார்.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தை, எதிர்கட்சியான எம் டி சி புறக்கணித்தது.

இவ்வகையில், வெளிநாட்டு நிறுவனங்களை தேசியமாக்குவது முதல் முறையாக கடந்த 2010 ஆம் ஆண்டு அங்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

முகாபே அவர்களின் திட்டத்தின்படி, அங்கு செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், அதில் 51 சதவீதப் பங்குகளை ஜிம்பாப்வேயினருக்கு அளிக்க வேண்டும்.

அவரது இப்படியான நடவடிக்கை, வெளிநாட்டிலிருந்து ஜிம்பாப்வேக்கு வரும் முதலீடுகளை பாதிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அவரது இந்தச் சட்டம் இதுவரை சுரங்கத் துறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. -BBC