சிரியாவின் சமாதான மத்தியஸ்தராக உதவி புரிய தயார்: ஈரான் ஜனாதிபதி

hassan_rouhani_001சிரியாவின் சமாதான மத்தியஸ்தராக உதவி புரிவதற்கு தமது நாடு தயாராகவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானே தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டு கொள்கையின் ஒர் பகுதியாக ஈரான் இதனை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேச்சுவார்த்தைகளை முன்நோக்கிக் கொண்டு செல்லதற்கான ஆக்கபூர்வமான பணிகளுக்காக கைகோர்க்க வேண்டுமெனவும் ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவைக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேரவையின் சந்திப்பில் இது தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்று வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.