எய்ட்ஸ் கிருமிகள் தங்களை தாங்களாகவே அழித்துக் கொள்ளும் வகையில், புதிய மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் வடிவமைத்துளளனர். இதன் மூலம் எயட்ஸ் கிருமிகளால் ஆரோக்யமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, உயிரிழப்பும் தவிர்க்கப்படும்.
எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டால் மரணம் நிச்சயம் என உலகமே அச்சப்படும் நிலையில், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் தாங்களாகவே அழிந்து போகும் வகையில், ஒரு புதிய மூலக்கூறு உருவாக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெரக்ஸல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ குழுவினர் இதை உருவாக்கியுள்ளனர். எய்டஸ் கிருமிகளை அழிக்க, பலவகையான மூலக்கூறுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், “தாவெய்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மூலக்கூறு பிரதானமாகக் கருதப்படுகிறது.
ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல், எய்ட்ஸ் பரப்பும் செல்களில் உட்புகுந்து கொல்லும் ஆற்றல் பெற்றது இந்த மூலக்கூறு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டெரக்ஸல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் கேமரூன் அப்ராம், டெரக்ஸல் மருத்துவக் கல்லூரி மூலக்கூறு உயிரியல் துறையைச் சேர்ந்த டாக்டர் இர்வின் செய்கென் மற்றும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் ஆர்.வி. கல்யாண சுந்தரம் ஆகியோர் இணைந்து இந்த மூலக்கூறை உருவாக்கியுள்ளனர்.