சிறார் தொழிலாளர் எண்ணிக்கையில் நல்ல வீழ்ச்சி

child_labourஉலக அளவில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு கூறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்த சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை 7 கோடியே 80 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக ஐநாவின் கிளை அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இதிலும் குறிப்பாக, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமும் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25 சதவீதமும் குறைந்துள்ளன.

இந்த முன்னேற்றத்துடன் திருப்தியடையக் கூடாது என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆனால் இன்னும்கூட 16 கோடியே 80 லட்சம் குழந்தைகள் சிறார் தொழிலாளர்களாக இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் குழந்தைகள் எண்ணிக்கையில் இது 11 சதவீதத்தை இது குறிக்கிறது.

சஹாரா பாலைவனத்துக்கு தெற்கில் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை – சிறார் தொழிலாளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. -BBC