நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!

Najib - Raya1நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது.

நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் வெளியிட்டார். இந்த விருந்தை குஸி கேட்டரிங் தயாரித்தது. ஒரு தட்டு உணவின் விலை ரிம36தான்.

இக்கேள்வியை கேட்டிருந்த டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் திருந்த இல்ல உபசரிப்பு நல்லதுதான். ஆனால், இதில் மக்களின் வரிப்பணம் சம்பந்தப்படுகிறது என்றார்.

இது ஒரு நிகழ்ச்சிதான். ஒவ்வொரு அமைச்சும், ஒவ்வொரு இலாகாவும் திறந்த இல்ல நிகழ்ச்சியை நடத்துகின்றன.செலவைக் குறைத்தால் எத்தனை மில்லியை மிச்சப்படுத்தலாம். சிந்தித்துப் பாருங்கள் என்றாரவர்.

இந்த வகையிலான செலவுகள் எல்லாம் வழக்கமான விவகாரம்தான். இதற்கு முன்னர் ,  10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிம 10 மில்லியன் செலவிட்ட ராயா நிகழ்ச்சியை கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது, ஆளுக்கு ஒரு மில்லியன். இத்தகவலும் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டதுதான்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிம1 மில்லியன் செலவிட்டால், பிரதமர் ரிம2.8 மில்லியன் செலவிட்டது என்ன பெரிய தொகையா என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள். விருந்து முடிந்ததும் பெட்ரோல் விலையை ஏற்றினால், பிரச்னை தீர்ந்தது. மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்போம்!

வாக்களிப்போம் என்று ஒப்பந்தம் கூட செய்வோம்.