அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறன் கொண்ட மினிட்மேன்-3 ஏவுகணைச் சோதனை கலிபோர்னியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது,
வான்டன்பர்க் விமானப்படை ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணி 33 நிமிடங்களுக்கு மினிட்மேன்-3 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படையின் 20ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி ஸ்காட் பாக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை 35 ஆயிரத்து 300 கிலோ எடையும், சுமார் 59 அடி நீளமும், 5 அடி 6 அங்குல விட்டமும் கொண்டது. இது 13 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் உடையது.
ஒவ்வொரு மினிட்மேன் ஏவுகணையும் 300 முதல் 500 கிலோ டன்கள் எடையுள்ள மூன்று அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. மினிட்மேன்-3 ஏவுகணையின் கட்டமைப்புப் பணிகள் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.