குற்றத் தடுப்பு சட்ட எதிர்ப்பு என்பது ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக மாறிவிடக்கூடாது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.
“வழக்குரைஞர்களோ, தனிப்பட்டவர்களோ, என்ஜிஓ-களோ குற்றவாளிகளின் செயல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது”.
குற்றத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தம், விசாரணையின்றி காவல் என்ற நிலையை மீண்டும் கொண்டு வந்துவிடும் என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோது அஹ்மட் ஜாஹிட் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தின் நல்ல நோக்கத்தை வழக்குரைஞர்களும் என்ஜிஓ-களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கக்கூடாது என்றும் அச்சட்டத் திருத்தம் குற்றவாளிகளைக் குறி வைத்துதான் கொண்டு வரப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டுள்ள கொலைகாரனங்களுக்கு ஆதரவா அமைச்சரவையே பேசும்பொழுது, ஏண்டாய்யா NGo எல்லாம் கடிக்கிற?
குண்டர் கும்பலுக்கு ஆதரவாக பேசுபவர்களையும், குண்டர் கும்பல் பட்டியலில் சேர்க்கவேண்டும்.
குற்றவாலி என்று நீர் சொல்லகூடாது,நீர் சொன்னால் சட்டத்தை kayyil எடுத்து கொண்டதற்கு சமம்,நம் நாடு ஜனநாயக நாடு நீதிமன்றம் சட்டம் வுண்டு.கைது செய் நீதி முன் நிறுத்து அது தான் காவல் துறை கடமை.
தவளை தன் வாயால் கெடும் இவனுக்கு நேரம் வந்துவிட்டது .
குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வக்காலத்து வாங்கவில்லை. நிரபராதிகள் அரசியல் நோக்கத்துக்காக வஞ்சிக்கப் படக்கூடாது என்றுதான் வாதாடுகின்றோம். PCA சட்ட திருத்தத்தில் அரசாங்கத்துக்கு வசதியாக சட்டத்தை அமைத்துக் கொண்டு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்கவே, திருத்தம் செய்யப்படும் சட்டத்தில் தகுந்த பாதுகாப்பு இருக்க வேண்டும் என்கின்றோம். புரியாத மாதிரி நீங்கள் நடித்தால் அதற்க்கு மக்கள் பொறுப்பல்ல அமைச்சரே!