மனிதர்களின் இருதயங்களை சாப்பிடும் தீவிரவாதிகள்: அமைச்சர் பரபரப்பு தகவல்

syria_foreign_minister_001சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தன.

இதனை தொடர்ந்து தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாலித் அல்-மொயல்லம், சிரியாவில் வன்முறையில் ஈடுபடும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போர் நடந்து வருகிறது, இதனை ஏற்றுக் கொள்ள சில நாடுகள் மறுக்கின்றன.

சில தீவிரவாதிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கும் பொதுமக்களை கடத்தி சென்று அவர்களை கொலை செய்கின்றனர், பின்னர் அவர்களின் இருதயங்களை சாப்பிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி கடத்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை தனித்தனியாக பிரித்து எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டுகின்றனர்.

இக்காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த மே மாதம் வெளியானது என்று தெரிவித்துள்ளார்.