மத்திய சீனாவில் குளவிகள் கொட்டிய தொடர்ச்சியான சில சம்பவங்களில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் குளவிக் கொட்டுக்களால் காயமடைந்துள்ளனர்.
ஷாங்க்ஸி மாகாணத்தில் கடந்த சில வாரங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
குளவிக்கூடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குளவிக் கொட்டுக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விசேட மருத்துவமனைகளையும் அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த ஆண்டு நிலவிய வெப்பமான, ஈரப்பதமற்ற சீதோஷ்ண நிலையும், தாவரங்கள் அதிகம் வளர்ந்ததும் இந்தக் குளவித் தாக்குதல்கள்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள். -BBC