உங்கள் கருத்து ‘ஜாஹிட் அவர்களே, இது தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காணாமல் போயின என்பதை விளக்குவது உங்கள் பொறுப்பு. நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றிப் பேசுவோம்’
தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது
கிம் குவேக்: போலீஸ் தலைவர் காணாமல் போன ஆயுதங்கள் கடலில் விழுந்திருக்கலாம் என்று சொன்னது ஒரு அனுமானம்தான். அவருடைய அனுமானம் சரியான காரணம் அவருக்கும் தெரியவில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.
இப்படிப்பட்ட சம்பவத்தை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், போலீஸ் அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி இருக்க உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எப்படி அதன் பின்னணியில் குற்றம் எதுவும் நிகழவில்லை என்று அறிவிக்க முடியும்?
கீ துவான் சை: உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எப்படி, துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார்? அது சாத்தியமா என்று கொஞ்சமாவது ஆரய்வதில்லை?
அத்தனை துப்பாக்கிகளுமா ‘கடலில் விழுந்திருக்கும்’? காணாமல்போன துப்பாக்கிகள் பற்றி புகார் செய்யப்பட்டதுண்டா? அப்புகார்களில் அவை கடலில் விழுந்தன என்று கூறப்பட்டுள்ளதா?
இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் ஐஜிபி தப்பிக்க முடியாது.
பையுன்செங்: சுடும் ஆயுதங்கள் வைத்திருப்பவருக்குத் தூக்கு. சுடும் ஆயுதங்களைத் தொலைத்தவருக்குத் தண்டனை எதுவும் இல்லை.
உண்மை சொல்வோன்: ஜாஹிட் அவர்களே, கவனக்குறைவால் 44 ஆயுதங்களைத் தொலைத்துவிட்டு அதைப் பற்றி முறையாக புகார் செய்யாதது மாபெரும் குற்றமாகும். அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் இருக்கிறீர்களே, அது எப்படி? அதைப் பற்றி புகார் எதுவுமே செய்யப்படவில்லை. அப்படி இருக்க அதன் பின்னணியில் குற்றம் எதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகிறீர்களே, அது எப்படி?
ஆத்திரம் கொண்டவன்: ஜாஹிட், உங்கள் சம்பளத்தைக் கொடுப்பது நாங்கள். அதனால், கேள்விகள் கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுடையது.
டூன் ஆர்மி: ஜாஹிட் அவர்களே, இது தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காணாமல் போயின என்பதை விளக்குவது உங்கள் பொறுப்பு. நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றிப் பேசுவோம்.
பிசிஏ (குற்றத்தடுப்புச் சட்டம்) பையில் இருக்கிறது என்ற கர்வத்தில் பேச வேண்டும்.
பெயரிலி _3e86: ஏன் அவர் அந்த விவகாரம் பற்றிப் பேச அஞ்சுகிறார்?
“மேலும் அதிகமானோர் போலீசை நம்புகிறார்கள்”, என்றும் சொல்லி இருக்கிறார். எப்படி, இப்படியெல்லாம் பேச முடிகிறது. எதுவும் கனவு காண்கிறாரோ?
போலீசுக்கு வக்காலத்து வாங்க, மக்களின் கேள்வி கேட்கும் உரிமைகளை ஒதுக்கித்தள்ளி ஒரு சர்வாதிகாரிபோல் நடந்துகொள்கிறார் ஜாஹிட்.
பெயரிலி#22878930: தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை தயாரிப்பதை நிறுத்தி விடலாம். அதற்கு எவ்வளவு செலவாகிறது என்று யாராவது தெரிவிப்பார்களா?
நாம் எல்லாருமே அவ்வப்போது எதையாவது தொலைத்து விடுவதில்லையா. அப்படித்தான் இதுவும்..
ஜென்: ஆயுதங்களைத் தொலைப்பது ஒரு கடுமையான குற்றம், ஐயா.
இதையெல்லாம் தலைமைக் கணக்காய்வாளர் கவனப்படுத்தக் கூடாது என்றால், மூடி மறைக்கச் சொல்கிறீர்களா?
மிஸ் பண்டோரா: சராசரி மக்களின் உலகில், ஏதாகிலும் தவறு செய்துவிட்டால் அதற்கான காரணத்தை ஆராய்வோம்.
ஆனால், பிஎன் உலகம் வேறு. அங்கு யாரும் மேற்கொண்டு பேசக்கூடாது, அனைவரும் வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.
பீட்டர் கிளெமெண்ட்: அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றால், கணக்கறிக்கை தயாரிக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன?
அப்சலோம்: அமைச்சர் என்பவர் மக்களின் சேவகர். மக்களுக்குச் சேவை செய்வதாக வாக்குறுதி வழங்கித்தான் அவர் அப்பொறுப்பில் இருக்கிறார். சாதாரண மக்கள் வழங்கும் வரிப்பணத்திலிருந்து அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. சேவைக்கால முடிவில், அனுபவிக்க, கொளுத்த ஓய்வூதிய தொகையும் கிடைக்கிறது.
மக்கள் எல்லா இடத்துக்கும் சென்று அமைச்சரைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க முடியாது. அதற்காகத்தான் செய்தியாளர்கள் இருக்கிறார்கள். மக்களின் சார்பாகத்தான் செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள். வேறு எதற்கும் சரிப்படாத நீங்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது பதில் சொல்லலாமே.
உள்துறை அமைச்சரே, செய்தியாளர்களை மிரட்டாதீர்கள்.
தொலைந்துபோன துப்பாக்கிகளுக்கும் C4 குண்டுகளுக்கும் கேள்வி கேட்கும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு கிடையாது. மலேசியா என்ன, ஜனநாயக நாடு என்ற நினைப்பா? பொத்திக்கொண்டு இருங்கள். இல்லையேல் புதிய சட்டமான PCA வில் உள்ளே தள்ளிவிடுவோம், ஜாக்கிரதை! [ஆச்சர்யப்படாதீர்கள், இன்னும் சில நாட்களில், நம் மந்திரிகள் வாயிலிருந்து இவ்வார்தைகளே வெளிவரும்]
மானம் கெட்டவன் ,கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதவன்…..!!!!!
இந்த மவனுக்கு என்ன தைரியம் இருக்கும் ,அதுவும் ஒரு பத்திரிக்கை நிருபரை மிரட்டுகிறான் ,இந்த இவன் ஒரு தற்காப்பு அமைச்சர் ,அடுத்த தேர்தலில் இவன விரட்டி அடிக்க வேண்டும் ,பேசுறான் பாரு……!!!!
எந்த அடிப்படையில் இப்படி பேசுறான்,இடை தேர்தல் வருது பார்க்கலாம்.
தப்பு செய்தவன் எப்படி குற்றத்தை ஒப்பு கொல்வான். அப்பாவி மக்கள் செய்தால் தப்பு ஆனால் அவர்கள் செய்தால் நாயம்
கேள்வி கேட்க கூடாது என்றால் ஒரு வேலை இவன் ஒரு வழி பன்னிருபானோ.பதில் சொல்ல தெரியாத பரதேசி .
போலிசார் கடலுக்கு ஏன் துப்பாக்கிகளோடு போனார்கள்.. மீன் சுடவா????